11ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கிடையாது – மாநில கல்வி கொள்கை
11ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கிடையாது என்றும் 10 மற்றும் 12 வகுப்பிற்கு மட்டுமே பொதுத்தேர்வு என்று மாநில கல்வி கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற பின் தமிழ்நாட்டிற்கென மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்க குழு அமைக்கப்படும் எஎன 2021-22ஆம்ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்து.
அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு 2022ஆம் ஆண்டு அமைக்கப்பட்டிருந்தது. அந்த குழு 600 பக்கங்கள் கொண்ட அறிக்கையை கடந்த ஆண்டு ஜூலை மாதம் சமர்ப்பித்தது. இதில், இரு மொழிக் கொள்கையே பின்பற்றப்பட வேண்டும் என்றும், 3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கூடாது என என்றும் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளிக் கல்வியில் தமிழை முதல் மொழியாக நிலைநிறுத்த வேண்டும் என்றும், தொடக்க நிலை முதல் பல்கலைக்கழக நிலை வரை தமிழ்வழிக் கல்வியை வழங்க வேண்டும் என்றும், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது.





