--- --:--:-- --

80 மாவட்டங்களில் 7 நாட்களில் தொற்று ஏதும் இல்லை

10

எண்பது மாவட்டங்களில் கடந்த 7 நாட்களில் கொரொனா தொற்று எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்திருக்கிறார். பயோ டெக்னாலஜி துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற காணொலி காட்சியில் இதனை தெரிவித்த அவர் தொற்று, இறப்பு விகிதமும் கடந்த மூன்று தினங்களாக 10.9 நாட்கள் என்று குறைவான எண்ணிக்கையில் இருக்கிறது என்றார்.

 

27 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களில் யாருக்கும் கொரொனா தொற்று ஏற்படவில்லை என்பதுடன் 39 மாவட்டங்களில் கடந்த 21 நாள்களில் கொரொனா தொற்று எதுவும் இல்லை என தெரிவித்திருக்கிறார். 17 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களில் எந்த கொரொனா தொற்று கண்டுபிடிக்கப்படவில்லை.

Leave a Reply

Right Menu Icon