பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, சொந்த கட்சியை விமர்சித்த அமைச்சர்.. உடனடியாக பதவி நீக்கம்..!
ராஜஸ்தானில் பெண்கள் பாதுகாப்பு குறித்து சொந்த அரசை விமர்சித்தவர் அரசியல் பதிவிலிருந்து நீக்கப்பட்டார். ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் மணிப்பூர் விவகாரம் பற்றி விவாதிக்க உறுப்பினர்கள் வலியுறுத்திய பொழுது ராஜஸ்தானிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ராஜேந்திர குதா விமர்சித்தார்.
ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை பார்க்கும் பொழுது மணிப்பூர் விவகாரத்தை விட ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து ஆராய வேண்டும் என்றார்.
மாநில அரசு குறித்து சொந்த கட்சியை அமைச்சர் விமர்சித்தது பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் முதலமைச்சர் பரிந்துரையின் படி அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.






