சிறைக்கு அழைத்து செல்லும்போது தப்பிய இளைஞர் ராமேஸ்வரத்தில் கைது..!
இலங்கையில் சிறைக்கு அழைத்து செல்லும் பொழுது தப்பிய இளைஞர் ராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டார். இலங்கையில் இருந்து படகு மூலம் வந்ததாக கூறி ராமேஸ்வர முகாமுக்கு சிந்துஜன் என்பவர் சென்றுள்ளார்.
அவரிடம் அதிகமாக உணவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய பொழுது குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு அழைத்து செல்லும் பொழுது காவலர்களிடம் இருந்து தப்பியது தெரியவந்தது. அவரை இலங்கை காவல்துறை தேடி வரும் நிலையில் தமிழக காவல்துறையினர் கைது செய்தனர்.






