நடிகர் பிரபு உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட தகவல்..!
திரைப்பட நடிகர் பிரபு சிறுநீரக பிரச்சனை காரணமாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறுநீரகத்தில் கல்லடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு லேசர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரக கற்கள் அகற்றப்பட்டன.
தற்பொழுது பூரண உடல் நலத்துடன் இருக்கும் அவர் அறுவை சிகிச்சைக்கு பின் பொதுவான மருத்துவ சோதனைக்கு பிறகு ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.






