--- --:--:-- --

விபத்தில் உயிரிழந்த இளைஞர்.. இறந்தும் பலரை வாழ வைத்த தெய்வம்..!

8

நெல்லை மாவட்டத்தில் விபத்தில் சிக்கி மூளை சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகளை அவரது உறவினர்கள் தானமாக வழங்கினர். கன்னியாகுமரி மாவட்டம் சாமிநாதபுரத்தை சேர்ந்த பிரவீன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் நெல்லைக்கு சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்பி கொண்டு இருந்தார்.

 

அப்பொழுது அவரது இரு சக்கர வாகனம் கார் மீது மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் பிரவீன் மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க உறவினர்கள் முன் வந்தனர்.

 

இதனையடுத்து மதுரை உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு பிரவீன் உறுப்புகள் ஆம்புலன்ஸ் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

 

Right Menu Icon