--- --:--:-- --

பள்ளி மாணவியை ரயில் முன் தள்ளி விட்ட இளைஞர்கள்..!

8

த்திரபிரதேசத்தில் இளைஞர்கள் தண்டவாளத்தில் தள்ளி விட்டதில் ரயில் மோதி 10ம் வகுப்பு பள்ளி மாணவி கை மற்றும் இரண்டு கால்களை இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

உத்தரபிரதேச மாநிலம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பொழுது அவரை பின்தொடர்ந்து வந்த அதே கிராமத்தை சேர்ந்த இரண்டு பேர் மாணவியை தண்டவாளத்தில் தள்ளிவிட்டு தப்பி ஓடினர்.

 

அப்பொழுது இரண்டு கால்கள் மற்றும் ஒரு கையில் சிறுமி படுகாயம் அடைந்தார். அவரை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இது தொடர்பாக சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளைஞர்களை தேடி வருகின்றனர். இது தொடர்பான விசாரணையில் கடந்த சில நாட்களாகவே சிறுமிக்கு தொல்லை கொடுத்து வந்த இளைஞர்கள் பின்தொடர்ந்து வந்து தண்டவாளத்தில் தள்ளிவிட்டு தப்பி ஓடியது தெரிய வந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon