கொள்ளையடித்த பணத்தில் ஏழைகளுக்கு உதவி செய்யும் இளைஞர்..!
பணக்காரர்களின் வீடுகளில் கொள்ளை அடித்து சொந்த ஊரில் உள்ள ஏழைகளுக்கு உதவிய திருடனை போலீசார் கைது செய்தனர். பிஹார் மாநிலத்தின் ஜோதியா கிராமத்தை சேர்ந்தவர் முகமது இர்பான்.
இவர் டெல்லி, ஹைதராபாத், பெங்களூர் ஆகிய நகரங்களில் உள்ள பணக்காரர்களின் வீடுகளை நோட்டமிட்டு கைவரிசை காட்டியுள்ளார். மேலும் கொள்ளை அடித்தவர் மூலம் கிடைக்கும் பணத்தை தமது ஊரில் வசிக்கும் ஏழைகளுக்கு செலவு செய்து வந்துள்ளார்.
ஹைதராபாத்தில் கொள்ளையடித்த இர்பானை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.





