காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற இளைஞன்..!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் காதலை ஏற்க மறுத்த இளம்பெண் இளைஞன் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினம் மாவட்டம் வரலட்சுமி என்பவர் இன்டர்மீடியட் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
அதே ஊரை சேர்ந்த அகில் என்பவன் காதலிப்பதாக கூறி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளான். இந்த நிலையில் உறவினர் திருமணத்தில் பங்கேற்க சாய்பாபா கோவிலுக்கு வரலட்சுமி சென்றதை அறிந்த அகில் கத்தியை எடுத்து அவரது கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்டான்.
அங்கிருந்த காவல்துறையினர் வரலட்சுமி உடலை கைப்பற்றி விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய அகிலை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.






