--- --:--:-- --

instaவில் பெண் போல நடித்து மிரட்டிய இளைஞர்..!

4

பெண் எனக்கூறி instagram மூலமாக பல பெண்களை தொடர்பு கொண்டு பேசி அவர்கள் ஆடைகள் இன்றி காட்சியளிக்கும் படங்களை வாங்கி வீடியோ காலில் பேசும்படி மிரட்டிய தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.

 

புதுச்சேரியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் திவாகர் என்பவர் தன்னைப் பெண் என அடையாளப்படுத்திக் கொண்டு இன்ஸ்டாகிராம் மூலம் பல பெண்களை தொடர்பு கொண்டு அவர்களது புகைப்படங்களை கேட்டிருக்கிறார்.

 

அவர்களது உடல் அமைப்பிற்கு என்ன மாதிரியான உடற்பயிற்சிகளை செய்யலாம் என்பதை கூறுவேன் என பேசி பல பெண்கள் ஆடைகள் இல்லாமல் உள்ள படங்களை வாங்கி இருக்கிறார். பின்னர் வேறு இன்ஸ்டாகிராம் முகவரியில் அந்த பெண்களை தொடர்பு கொண்டு அவர்கள் ஆடையின்றி இருக்கும் படங்கள் தன்னிடம் இருப்பதாக கூறியுள்ளார்.

 

அந்த பெண்கள் தன்னிடம் வீடியோ காலில் பேச வேண்டும் என்றும் தவறினால் படங்களை இணையத்தில் வெளியிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் சைபர் கிரைமில் புகார் அளித்ததையடுத்து திவாகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Right Menu Icon