சேலத்தில் 500 கிலோ கேக் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது..!
சேலம் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு 500 கிலோ எடையிலான கேக் தயாரிக்கும் பணி தொடங்கிவிட்டது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையில் நம் அனைவரின் நினைவுக்கும் வருவது கேக்.
நம் அன்பிற்குரியவர்களுக்கு வழங்கும் இந்த கேக் தயாரிக்கும் பணியில் தமிழகத்தில் உள்ள பல்வேறு நட்சத்திர விடுதிகளில் தொடங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கேக் மிக்சிங் திருவிழா நடைபெற்றது.
இதில் கேக் தயாரிக்க பயன்படும் முந்திரி பழங்கள், பாதாம்பருப்பு, உலர்திராட்சை, செர்ரி பழம் உள்ளிட்ட மூலப் பொருட்களை உயர்ரக மதுபானங்களை கொண்டு கலக்கும் பணி இன்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து இந்த மூலப் பொருட்களைக் கொண்டு 500 கிலோ எடையுள்ள கேக் தயாரிக்க போவதாக கேக் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.






