தீபாவளிக்கு 2 புதிய திரைப்படங்கள் வெளியாகிறது..!
நடப்பு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பாரதிராஜா அறிவிப்பை மீறி இரண்டாம் குத்து, பிஸ்கோத் ஆகிய திரைப்படங்களை தீபாவளிக்கு திரையரங்கில் திரையிட முடிவு செய்துள்ளனர்.
விபிஎஃப் முடிவு எட்டப்படாததால் புதிய படங்களை திரையிடமாட்டோம் என்று பாரதி ராஜா அறிவித்ததால் ஏற்கனவே ஓடிக்கொண்டிருந்த படங்களையும், பிற மொழி படங்களையும் திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்தனர்.
இந்நிலையில் பாரதிராஜாவால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட இரண்டாம் குத்து திரைப்படம் மற்றும் சந்தானம் நடிப்பில் உருவான பிஸ்கோத்து படத்தையும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதே போல் மேலும் சில படங்களை ரிலீஸ் செய்வது குறித்து பேச்சு நடத்தி வருவதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நவம்பரில் ரிலீஸ் செய்யப்படும் படங்களுக்கு விபிஎஃப் கட்டணத்தில் 100 சதவீதம் தள்ளுபடி அளிப்பதாக டிஜிட்டல் சேவை அளிக்கும் கியூப் அறிவித்துள்ளது.






