கழிவறைக்கு சென்ற பெண் நள்ளிரவில் காத்திருந்த அதிர்ச்சி..!
கள்ளக்குறிச்சி அருகே அடுத்தடுத்த இரண்டு கிராமங்களில் மர்ம நபர்கள் பெண்களை கத்தியை காட்டி மிரட்டி தங்க செயின் மற்றும் பணத்தைப் பறித்து சென்றுள்ளனர். நள்ளிரவில் கழிவறை செல்வதற்காக ஜீவா என்ற பெண் வீட்டில் வெளியே வந்துள்ளார்.
இருட்டில் மறைந்திருந்த கொள்ளையர்கள் ஜீவாவின் கழுத்தில் இருந்த ஏழு சவரன் நகையை பறிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு அதே தெருவை சேர்ந்த பழனியம்மாள் என்ற மூதாட்டி ஜீவா வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார்.
அந்த சமயத்தில் பழனியம்மாள் வீட்டில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர். தொடர்ந்து அங்கிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேலூர் கிராமத்தில் அண்ணாதுரையின் வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட பொழுது அந்த குடும்பத்தினர் சத்தம் போட்டு கையில் தடியை எடுத்த பொழுது கொள்ளையர்கள் தப்பியோடியதாக கூறப்படுகிறது.





