மதுபோதையில் அத்துமீறிய நபரை புரட்டி எடுத்த பெண்மணி..!
பேருந்தில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற மதுபோதை இளைஞரை பாதிக்கப்பட்ட பெண் சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் மணிகண்டன் இவர் நெல்லை பேருந்து நிலையம் நாகர்கோவில் செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார்.
அப்போது பேருந்தில் இருந்த பெண் ஒருவரிடம் போதை இளைஞர் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சக பயணிகள் போதை இளைஞரை கீழே இறக்கிவிட பாதிக்கப்பட்ட நபரை சரமாரியாக தாக்கினார்.
தகவலறிந்து வந்த போலீசார் மணிகண்டனை அங்கிருந்து மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவன் அதிக மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





