பாலியல் துன்புறுத்தல் அளிக்க முயன்ற நபரை செருப்பால் அடித்த பெண்..!
பெங்களூருவில் தனக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்க முயன்ற நபரை பெண் ஒருவர் செருப்பால் அடித்து விரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஜேசி நகரை சேர்ந்த அந்த பெண் கடந்த 26ஆம் தேதி அதிகாலை 5 மணி அளவில் பூஜைக்கு பூ பறிப்பதற்காக தனது தெருவழியே தனியாக நடந்து சென்றுள்ளார்.
அப்போது அவரை வழி மறித்த மர்ம நபர் ஒருவன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டான். உடனடியாக தனது காலில் இருந்த செருப்பை கழற்றி அந்தப் பெண் அடிக்க தொடங்கவே அவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடினான்.







