காவலர் உடல் தகுதி தேர்வின் போது கதறியழுத பெண்..!
கடலூரில் இரண்டாம் நிலை காவலர் உடல் தகுதி தேர்வின் போது கதறியழுத பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
கடந்த 3 நாட்களாக பெண்களுக்கான உடல் தகுதி தேர்வு நடைபெற்று வரும் நிலையில் கணவனை இழந்த பெண்களுக்கு உடல் தகுதி தேர்வு நடந்தது. அப்போது விதவைக்கான சான்றிதழ் வேண்டும் எனக்கூறி 9 பேரை வெளியே அனுப்பியதாக தெரிகிறது.
விதவை சான்றிதழ் இருக்கும் பட்சத்தில் அதிகாரிகளின் கையெழுத்து வேண்டும் என கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.






