ருசி கண்ட மனைவி… வெறி கொண்ட கணவன்… திருப்பூரை அதிரவைத்த சம்பவம்!
காமம் தலைக்கேறி தனக்கு துரோகம் புரிந்த மனைவியை, அரிவாளால் கணவன் வெட்டிக் கொன்ற சம்பவம், திருப்பூரை அதிர வைத்துள்ளது.காலம் ரொம்பவே கெட்டுப்போய்விட்டது. விஞ்ஞான வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும், நவீன தகவல் தொடர்பு சாதனங்கள், சமூக வலைதளங்களால் கள்ளக்காதல் உள்ளிட்ட விபரீதங்களும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, மனைவிக்கு துரோகம் செய்யும் கணவன், கணவனை ஒதுவிட்டு கள்ளக்காதலில் உல்லாசம் அனுபவிக்கும் மனைவி என்பது போன்ற செய்திகள் அன்றாடம் பார்க்க முடிகிறது.
திருப்பூரில் அப்படியொரு சம்பவம், கொலையில் போய் முடிந்திருக்கிறது. தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர், 31 வயதான குமார். சரக்கு வேன் ஓட்டுனராக உள்ளார். இவரது மனைவி, 25 வயதான தனலெட்சுமி. திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு, இருவருக்கும் திருமணம் நடந்திருக்கிறது.
ஆரம்பத்தில் வாழ்க்கை சுகமாக போய்க் கொண்டிருந்தது. இல்லறத்தின் பயனாக இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அண்மையில், இவர்களின் குடும்பம், திருப்பூர் வஞ்சிபாளையம் ரோடு ஜெ.ஜெ. நகர் பகுதிக்கு மாறி இருக்கிறது. அப்போது முதலே குடும்பத்திற்கு நேரம் சரியில்லை போலிருக்கிறது. கணவன் – மனைவி இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால், கணவன் கசக்க ஆரம்பித்தார்; அதே நேரம், தென்காசியில் இருந்தபோது தனலட்சுமிக்கு, வேறு ஒரு ஆணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இது தெரிய வந்ததும் குமார் அதிர்ச்சியடைந்தார்; கள்ளக்காதலை கைவிட்டுவிடும்படி தனலட்சுமியை எச்சரித்தார். ஆனால், ருசிகண்ட பூனை சும்மா இருக்குமா?
கணவர் சரக்கு வேன் டிரைவர் என்பதால், அடிக்கடி வெளியே செல்ல, தென்காசியில் உள்ள தனது கள்ளக்காதலனை வரவழைத்து, தனிமையில் தனலட்சுமி இனிமை கண்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கள்ளக்காதல் விவகாரம், வீட்டில் பூதாகரமாக வெடித்தது.
இந்த விவகாரம் குறித்டு, கடந்த புதன் கிழமை இரவில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் தலைக்கேறிய குமார், வீட்டில் இருந்த அரிவாளால், தனலட்சுமியை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த தனலட்சுமி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். தனலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடோடி வந்தனர். இதுபற்றி, போலீசாருக்கு தெரிவித்தனர்.
தகவல் அறிந்த வந்த, திருப்பூர் 15 வேலாம்பாளையம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தனலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, குமாரை கைது செய்தனர். கள்ளக்காதல் மோகத்தில் திளைத்த மனைவியை, கணவன் வெட்டிக் கொன்ற சம்பவம், திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




