பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட தலைமை காவலர் வீடியோ வைரல்..!
உத்திரப்பிரதேச மாநிலம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலர் பீக்சின் என்பவர் பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதையடுத்து ராம்நகர் காவல் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.
துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பிற காவலர்களிடம் அவரது நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.






