--- --:--:-- --

இணையத்தில் டிரெண்டாகும் பாம்பு காதல் கதை..!

3

ன்றைய உலகில் இல்லற வாழ்வில் இணைவதற்கு முன்னதாக பிரீ வெட்டிங் போட்டோசூட் நடத்துவது வழக்கம். இது தனி ஒரு வணிகமாக தற்போது உருவாகி வருகிறது. அதிலும் ப்ரீ வெட்டிங் போட்டோஸ் புகைப்பட கலைஞருடன் இணைந்து நிறைய மெனக்கெடுவார்கள். இதையெல்லாம் அழகான நினைவுகள் தான்.

 

இதற்கு என்ன பிரத்யேக ப்ராப்பர்ட்டி குடையும் பயன்படுத்துவதுண்டு. இந்த சூழலில் வித்தியாசமான முயற்சியாக படம் எடுத்து ஆடும் நாகப் பாம்புடன் ப்ரீ வெட்டிங் போட்டோ சூட் நடத்தியுள்ளனர். தற்பொழுது கவனம் பெற்றுள்ளது.

 

அந்த படங்களை கொண்டு ஒரு குட்டி காதல் கதையே சொல்லப்பட்டுள்ளது. பச்சை நிறத்தில் தோட்டம் சூழ்ந்த வீடு ஒன்றில் ஒரு பெண் நடந்து வருகிறார் அப்பொழுது ஒரு நாகப்பாம்பினை அவர் பார்க்கிறார். உடனடியாக அதை பிடிக்க வேண்டி போன் செய்கிறார்.

 

தொடர்ந்து இரண்டு பேர் ஒரு ஸ்கூட்டியில் வருகிறார்கள். அதில் ஒருவர் பாம்பை பிடிக்கிறார். அந்த பெண்ணுக்கும் பாம்பு பிடித்தவருக்கும் பார்த்தவுடன் காதல் ஏற்படுகிறது. பாம்பை பிடித்த பிறகு திரும்ப செல்லும் பொழுது போன் செய்யும்படி சிக்னல் கொடுக்கிறார்.

 

இருவரும் போனில் பேசுகிறார்கள், காதல் செய்கிறார்கள். இறுதியில் அவர்கள் இருவரும் இணைந்து நிற்க அவர்களுக்கு பின்பக்கம் பாம்பு படம் எடுத்து நிற்கிறது. இப்படியாக அந்த போட்டோக்கள் மூலம் கதை சொல்லப்பட்டுள்ளது.

 

Right Menu Icon