--- --:--:-- --

நீலகிரி, கோவை மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை..!

8

நீலகிரி, கோவை மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தென்மேற்கு பருவகாற்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. வட மேற்கு வங்க கடல் பகுதியில் வரும் 23ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon