--- --:--:-- --

பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் இறந்த சோகம்..!

2

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ததை கண்டித்து உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

நெடுமரத்தை சேர்ந்த பிரமிளா கடந்த 4ம் தேதி பிரசவத்திற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.

 

அடுத்த நாள் பிரமிளாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் அவருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஐந்து நாட்கள் சுய நினைவில்லாமல் இருந்த அவர் கடந்த பத்தாம் தேதி காலை உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது.

 

இந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்தும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும் பிரமிளாவின் உறவினர்கள் கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன்பு உள்ள சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Right Menu Icon