--- --:--:-- --

மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசி பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!

7

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி ஆசிரியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

 

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ஹபீப் முகமது பாடம் எடுப்பதாக சொல்லி மாணவிகளை தனது வீட்டிற்கு அறிவியல் புத்தகத்துடன் தனியாக வருமாறு அழைத்து பாலியல் பாடம் எடுத்ததாக கூறப்பட்ட வழக்கு தொடர்பான ஆடியோ இணையத்தில் வைரலானதில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

 

தற்போது அதிமுக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon