--- --:--:-- --

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் டெல்லி செல்கிறார்..!

8

மேகதாது அணை தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா பிரதமர் மோடியை நேரில் சந்திக்க இருக்கும் நிலையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் டெல்லி செல்கிறார்.

 

ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இருந்து டெல்லி புறப்படும் அவர் குடியரசுத் தலைவரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்படுகிறது. தமிழக முதல்வரான பின் குடியரசுத் தலைவரை சந்தித்து பேச இருப்பது இதுவே முதன்முறையாகும்.

 

மேகதாதுவில் அணை கட்டுவதில் கர்நாடகா பிடிவாதம் காட்டி வரும் நிலையில் முதலமைச்சரும் டெல்லி பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

Leave a Reply

Right Menu Icon