வீட்டின் பூட்டை உடைத்து நேற்று 110 சவரன் நகைகளை கொள்ளையடித்த திருடன்..!
நாகை மாவட்டம் நாகூரில் வீட்டின் பூட்டை உடைத்து 110 சவரன் நகைகளை கொள்ளை அடித்த நபர் திருடிய தலைப்பில் வீட்டின் பின்புறத்தில் சாவகாசமாக உறங்கிச் சென்றுள்ளார்.
நூல் கடை தெருவை சேர்ந்த தாவுத் பாத்திமா என்பவர் திருமண நிகழ்விற்கு சென்றிருந்த நேரத்தில் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் கொண்டு சோதனை செய்தனர். அப்பொழுது வீட்டின் பின் பக்கத்திலிருந்து துணிகளை விரித்து திருநெல்வேலிக்கு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.





