சென்னை மாநகராட்சியில் 10 இடங்களில் பசுமை பந்தல் : ராதாகிருஷ்ணன்
சென்னையில் முக்கியமான போக்குவரத்து வாகன நெரிசல்கள் மிகுந்த சாலையில் 10 இடங்களில் 40 லட்சம் ரூபாய் செலவில் பசுமை பந்தல் அமைக்கும் பணி நடைபெறுவதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர் பசுமை பந்தல் அமைக்கப்படும் பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும் இருப்பதாக கூறினார்.





