மாணவிகளிடம் தவறாக நடந்த மாணவர்களை கண்டித்த ஆசிரியருக்கு அடி உதை…!
உத்திரப்பிரதேசத்தில் மாணவிகளிடம் தவறாக நடந்த மாணவர்களை கண்டித்த ஆசிரியர் கடுமையாக தாக்கப்பட்டார். உத்திரப்பிரதேசத்தில் மாணவிகளிடம் தவறாக நடந்த மாணவர்களை கண்டித்த ஆசிரியர் கடுமையாக தாக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
பிரக்ய ராஜ் நகரில் உள்ள பள்ளியில் மாணவ. மாணவிகளுக்கு சுகாதார முகாம் நடந்தது. இதில் பங்கேற்ற மாணவிகளிடம் சில மாணவர்கள் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்த ஆசிரியர் மீது ஆத்திரமடைந்த சில மாணவர்கள் உருட்டுக்கட்டையால் தாக்குதல் நடத்தினர்.
பலத்த காயமடைந்த ஆசிரியர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பள்ளி வளாகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆசிரியரை தாக்கியவர் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.






