--- --:--:-- --

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர்..!

7

சிவகங்கை மாவட்டம் மதுகப்பட்டு அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டாரிப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

 

இந்நிலையில் இவர் அதே பள்ளியில் பயிலும் மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் ஆசிரியரை போக்ஸோ சட்டத்தின் வழக்கு பதிவு செய்து கைது செய்ததோடு அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

அரசு பள்ளி ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon