--- --:--:-- --

நடுவானில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறால் அவசர அவசரமாக தரையிறக்கம்..!

8

டெல்லியில் இருந்து மேற்குவங்கம் சென்ற விமானம் நடுவானில் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் டெல்லி விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது.

 

முன்னதாக நேற்று டெல்லியில் இருந்து மேற்கு வங்கத்தை நோக்கி 200 பயணிகளுடன் விமானம் சென்றது. நடுவானில் பறந்து கொண்டிருந்த பொழுது விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. தொடர்ந்து கோளாறை கண்டறிந்து விமானத்தை அவசரமாக தரையிறக்கம் செய்தார்.

 

இந்த நிலையில் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு மாற்று விமானம் மூலம் மேற்கு வங்கம் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon