--- --:--:-- --

நேபாளத்தை சேர்ந்த இளம் தம்பதி மர்மமான முறையில் மரணம்..!

6

சென்னை மாநகரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் கர்ப்பிணி மனைவியுடன் காவலாளி உயிரிழந்து கிடந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்து வந்த 24 வயதான பிரேம், 18 வயதான தனது மனைவி கமலாவுடன் காவலாளி என ஒதுக்கப்பட்ட அறையில் வசித்து வந்தார்.

 

கமலா மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். காவலர் பிரேமும் தூக்கிட்டு சடலமான நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். குடியிருப்பு வாசிகள் அளித்த தகவலின் படி உடலை கைப்பற்றிய போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon