இஐஏ குறித்து விசாரிக்க 12 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ள தமிழக அரசு..!
மத்திய அரசு வெளியிட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை குறித்து ஆய்வு செய்ய 12 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
தமிழக அரசின் வளம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையிலான இந்தக் குழு மத்திய அரசு வெளியிட்டிருக்கும் வரைவு அறிக்கையின் சாதக, பாதக அம்சங்களை விரிவாக ஆராய்ந்து அதன் முடிவுகளை அரசுக்கு அறிக்கையாக தரும்.12 பேர் கொண்ட இந்த குழுவில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலாளர் நகராட்சி நிர்வாக ஆணையர் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர், சுரங்கம் மற்றும் புவியியல் துறை இயக்குனர் உள்ளிட்டோர் இடம் பெற்றிருப்பர். இவர்கள் தவிர சுற்றுச்சூழல் மற்றும் தொழில்துறை சார்ந்த நண்பர்களும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.






