சிறுமிக்கு ஆன்லைன் வகுப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில் தாய் துப்பாக்கியால் சுட்டுக்கொலை..!
10 வயது சிறுமி ஜும் வகுப்பில் பங்கேற்றிருந்த இருந்தபோது அவரது தாய் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது. ப்ளோரிடா மாநித்தில் இந்தியன் டவுன் என்ற இடத்தில் மரபில் ரோசோடா மொரில்லாஸ் என்பவர் அவரது முன்னாள் காதலன் டொனால்ட் ஜே வில்லியம்ஸ் உடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அந்த சமயம் அவரின் 10 வயது மகள் ஆன்லைன் ஜும் வகுப்பில் பங்கேற்று வந்த நிலையில் அதில் இந்த காட்சிகள் பதிவாகின. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் மற்ற மாணவர்கள் பாதிக்காத வகையில் சிறுமியின் இணைப்பை மியூட் செய்தார்.
இதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மொரில்லஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தப்பியோடிய வில்லியம்ஸ் ஒரு மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






