தர்மபுரி மாவட்டத்தில் 100 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த இளைஞர்..!
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே 100 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து சுமார் 36 மணி நேரமாக தத்தளித்துக் கொண்டிருந்த இளைஞனை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
கடந்த புதன்கிழமை வெளியே சென்ற நாச்சினாம்பட்டி கிராமத்தை சேர்ந்த சூரியபிரகாஷ் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் லிங்கா புறப்பகுதியில் அங்கமுத்து என்பவருக்கு சொந்தமான 100 அடி ஆழம் உள்ள விவசாய கிணற்றில் இளைஞர் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த இளைஞன் சூரியபிரகாஷை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.






