--- --:--:-- --

சுவிட்சர்லாந்து ஆல்ப்ஸ் மலையில் ஒளிரும் இந்திய தேசியக்கொடி!

10

சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் மின்னொளியில் இந்திய தேசியக்கொடி ஒளிர விடப்பட்டது. சுவிட்சர்லாந்து சுற்றுலாத்துறை சார்பில் உள்ள மலை உச்சியில் மார்ச் மாத இறுதியில் இருந்து நாள்தோறும் ஒவ்வொரு நாட்டின் தேசிய கொடியும் மின்னொளியில் காட்டப்படுகிறது. ஒளி வல்லுனர் இந்த பணியை செய்து வருகிறார்.

 

கொரொனாவுக்கு எதிரான போரில் இந்தியர்களுக்கு நம்பிக்கையையும் வலுவையும் தரும் வகையில் 4 ஆயிரத்து 400 மீட்டர் உயரத்தில் இந்திய தேசியக் கொடியை அவர் மலையில் ஒளிர விட்டுள்ளார். இதற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியும் அந்த புகைப்படத்தை டேக் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் கொரொனாவுக்கு எதிராக உலகமே போரிட்டு வருவதாகவும் இந்த தொற்று நோய்களை மனிதநேயம் வெல்லும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon