அதிகாரிகள் முன்பே படிக்கட்டில் நின்றபடி பயணித்த மாணவர்கள்..!
கன்னியாகுமரி அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு உயர்கல்வி மீது ஆர்வம் ஊட்டுவதற்காக அரசு கலைக்கல்லூரியை சுற்றிப்பார்க்க அழைத்து செல்லப்பட்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேருந்துகளில் போதிய இடவசதி இல்லாததால் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் படிக்கட்டில் நின்றபடி மாணவர்கள் பயணம் செய்தனர்.





