முன்னாள் காதலனுடன் சேர ஆசைப்பட்டு மூட நம்பிக்கையால் 8.2 லட்சம் இழந்த இளம் பெண்..!
மூடநம்பிக்கையால் 8.2 லட்சம் இழந்த சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் முன்னாள் காதலனுடன் தன்னை சேர்த்து வைக்கக் கோரி மாந்திரீகம் செய்பவரிடம் சென்றுள்ளார்.
முதலில் 501 ரூபாய் மட்டுமே கேட்ட அந்த கும்பலின் தலைவர் பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மற்றும் முன்னாள் காதலனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் கேட்டுள்ளார்.
பிறகு முன்னாள் காதல் குறித்து பெற்றோரிடம் தெரிவித்து விடுவேன் என மிரட்டி 8.2 லட்சம் ரூபாய் பறித்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.






