--- --:--:-- --

சத்து மாத்திரை சாப்பிட்டு மயங்கி விழுந்த மாணவி..!

10

ட்டியில் விளையாட்டாக சத்து மாத்திரையை சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் காந்தல் பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் கடந்த ஆறாம் தேதி ஊட்டச்சத்து மாத்திரை வழங்கப்பட்டுள்ளது.

 

ஒருவருக்கு ஒரு மாத்திரை என வழங்கப்பட்ட நிலையில் பள்ளியில் சில பேருக்கு அதிகமான மாத்திரைகள் கிடைத்துள்ளன. அப்பொழுது மாணவ மாணவிகள் சிலர் விளையாட்டாக போட்டி போட்டுக் கொண்டு அதிக அளவில் மாத்திரைகளை சாப்பிட்டுள்ளனர். இதனால் மாணவ. மாணவிகள் மயக்கமடைந்தனர்.

 

இதனையடுத்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் உடல்நிலை மிகவும் மோசமடைந்த பாத்திமா என்ற எட்டாம் வகுப்பு மாணவி அடுத்த கட்ட சிகிச்சைக்காக சென்னை அழைத்து செல்லப்பட்டார். அப்பொழுது ஆம்புலன்ஸில் செல்லும் வழியிலேயே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon