24 மணி நேரமும் கடைகளை திறந்திருக்க மாநில அரசு அனுமதி..!
புதுச்சேரியில் 24 மணி நேரமும் கடைகளை திறந்திருக்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி தொழில்துறை சார்புச் செயலாளர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் புதுச்சேரியில் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் திறக்க அனுமதிக்கப்படுவதாகவும் இந்த நடைமுறை மூன்று ஆண்டுகள் அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் இருக்கும் கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்று குறிப்பிட்டு இருக்கும் தொழில்துறை சார்பு செயலாளர் பெண் ஊழியர்கள் இரவு 8 மணிக்கு மேல் வேலை செய்ய தேவையில்லை என்றும் எழுத்துபூர்வமான ஒப்புதலை பெற்ற பிறகு இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை பணிபுரிய அனுமதிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.





