சிறுமியை கடத்தி இல்லற வாழ்க்கை..தாயே துணை போன அதிர்ச்சி..!
திருப்பூரில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாநகராட்சி அனுப்பர்பாளையம் பகுதியை சேர்ந்த சிறுமிக்கு கார்த்திக் என்ற இளைஞர் பழக்கமாகியுள்ளார்.
இந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கார்த்தி தனது சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு அழைத்து சென்று தனது தாயார் உதவியுடன் ஆனைமலை பகுதியில் வீடு வாடகை எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் சிறுமியை காணவில்லை என்று அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கார்த்தி என்பவர் சிறுமியை கடத்தி சென்றதை கண்டறிந்தனர். சிறுமியை மீட்டு வந்தனர். பின்னர் கார்த்திகை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.





