திடீரென வெடித்து சிதறிய ஏழு மாடி கட்டிடம்..பதறி ஓடிய மக்கள்..!
வங்காளதேச தலைநகரான தாகாவில் ஏழு மாடி கட்டிடம் வெடித்து சிதறியதில் இரண்டு பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இதில் ஏராளமானோர் சிக்கிய நிலையில் உயிர் சேதம் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
7 மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மீது பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு திடீரென கட்டிடம் சரிந்ததாக உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள். இது சரியா என்பதை உறுதி செய்ய முடியவில்லை எனக்கூறி காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை மேற்கொண்டுள்ளனர்.






