வட மாநிலத்தவர்கள் உடன் ஹோலி பண்டிகையை கொண்டாடிய பல்லடம் கவுன்சிலர்..!
கோவை மாவட்டம் பல்லடம் அருகே தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களுடன் வார்டு கவுன்சிலர் வண்ணப் பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடினார். பல்லடம் நகராட்சி உறுப்பினர் சசிரேகா, ரமேஷ் குமார் தனது குடும்பத்துடன் சித்தூரில் வடமாநில தொழிலாளர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் அவர்களுடன் சேர்ந்து வண்ணப் பொடிகளை பூசி கோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தார். புலம்பெயர் தொழிலாளர்களும் மிகுந்த மகிழ்ச்சியோடு பண்டிகையை கொண்டாடினார்கள்.






