--- --:--:-- --

இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தன் காலமானார்..!

2

லங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவரான இரா.சம்பந்தன் எம்.பி இன்று காலாமனார். இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவருமாக இரா.சம்பந்தன் எம்.பி. பதவி வகித்து வந்தார்.

 

இந்நிலையில், இவர் வயது மூப்பு காரணமாக சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது.

 

இந்நிலையில், இன்று இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவரான இரா.சம்பந்தன் காலமானார். இலங்கையில் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த முதுபெரும் தலைவராகவும் திகழ்ந்து வந்தார்.

 

மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக 50 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.அவரது மறைவிற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon