பயனாளிகள் பட்டியலில் முதலில் வந்த ஊராட்சி மன்ற தலைவர் பெயர்..பொதுமக்கள் அதிர்ச்சி..!
பெரம்பலூர் அருகே கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளிகள் பட்டியலில் நாரணமங்கலம் ஊராட்சி மன்ற தலைவரின் பெயர் இடம் பெற்றதால் பயனாளிகள் பட்டியலை மறு ஆய்வு செய்ய கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நாடாளுமன்ற ஊராட்சியில் 50-க்கும் மேற்பட்டோர் கொடுத்து வருகிறார்கள். நாரணமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கலைஞரின் கனவு இல்லம் தொடர்பாக விளக்கம் அளிக்க வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
அப்பொழுது பயனாளிகள் பட்டியலில் ஊராட்சி மன்ற தலைவரின் பெயர் முதல் பெயராக இருந்தது கண்டு பொதுமக்கள் ஆவேசமடைந்தனர் .மேலும் அரசு விதிகளின்படி பட்டியல் தயாரிக்கப்படவில்லை என குற்றம் சாட்டி அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் பெயர் நீக்கிய புதிய பயனாளிகள் பட்டியல் வழங்கப்பட்டு கையொப்பமும் வழங்கப்பட்டது. மேலும் பயனாளிகள் இருந்தால் பெயரை சேர்க்க பரிசீலனை செய்யலாம் எனக் கூறி வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம சபை கூட்டத்தை நிறைவு செய்தார்.





