--- --:--:-- --

யானை வழித்தட வரைவு அறிக்கையில் இபிஎஸ் கண்டனம்..!

6

யானை வழித்தட வரைவு அறிக்கையை வெளியிட்டதற்கு எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

மலைவாழ் மக்கள் வாழ்வாதாரம் மற்றும் வாழ்விடங்களை இழக்கும் நிலையை திமுக அரசு உருவாக்கி உள்ளதாக குற்றம் சாட்டிய அவர் மலைவாழ் மக்களின் கருத்துக்கள் மற்றும் ஆற்றிய பணிகளை பதிவு செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

 

பல்வேறு வனப்பகுதிகளில் வாழும் மக்கள் பதட்டத்திற்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, மலைவாழ் மக்கள் வாழ்விடங்களையும் வாழ்வதற்கு உண்டான சூழலையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Right Menu Icon