--- --:--:-- --

காதல் தோல்வியால் போலீசாரை கத்தியால் குத்த முயன்ற ரவுடி..!

4

நாகையில் முன்னாள் காதலியை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி ரகளையில் ஈடுபட்ட ரவுடி போலீசாரை விரட்டி விரட்டி வெட்ட பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காதம்படி பகுதியைச் சேர்ந்த நேசமணி என்பவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் நேற்று புதிய பேருந்து நிலையம் அருகே ரௌடி நேசமணி கத்தியை வைத்துக்கொண்டு ரகளையில் ஈடுபட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

 

தகவல் அறிந்து வந்த போலீசார் நேசமணியை மடக்கி பிடித்து அவரை பிடிக்க முயன்ற பொழுது போலீசாரையும் கத்தியால் குத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

Right Menu Icon