வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகளில் இருந்தவர்கள் ஜேசிபி மூலம் மீட்பு..!
சென்னை வேளச்சேரி ஏஜிஎஸ் காலனியில் வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகளில் இருந்தவர்கள் ஜேசிபி மூலம் மீட்கப்பட்டனர். தண்ணீர் வடிந்துவிடும் என்று நம்பி காத்திருந்ததாகவும் நீர்மட்டம் குறையாததால் வேறு இடங்களுக்கு செல்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
வேளச்சேரி, சொக்கலிங்கம் நகரில் மழைநீர் சூழ்ந்த வீடுகளில் இருந்தவர்கள் படகுகள் மூலம் ஈடு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வீடுகளில் இருந்து வெளியேற மறுத்தவர்களுக்கு படகுகள் மூலம் உணவு பொருட்கள் கொண்டு சென்று விநியோகிக்கப்பட்டது.





