நன்கொடை தர மறுத்த ரேஷன் அரிசி விற்பவருக்கு அரிவாள் வெட்டு..!
திருச்சியில் நன்கொடை தர மறுத்த ரேஷன் அரிசி விற்பவர் அரிவாளால் வெட்டப்பட்டார். பி யு நகர் அணைக்கட்டி மைதான பகுதியை சேர்ந்த சிவனேசன் என்பவர் ரேஷன் அரிசி விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர் பாலக்கரை மேம்பாலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது பின்னால் வந்த நபர்கள் அவரை மறித்து அறிவாளால் சரமாரியாக வெட்டி தப்பி ஓடிவிட்டனர்.
இதில் பலத்த காயமடைந்த சிவனேசன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதற்கட்ட விசாரணையில் நன்கொடை தர மறுத்ததால் சிவனேசனை வெட்டியது தெரிய வந்தது.





