காணும் பொங்கல் அன்று எல்லைப் பந்தயம் நடத்துவது தொடர்பாக ஆலோசனை..!
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் காணும் பொங்கல் அன்று மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்லை பந்தயம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று 8 ஊராட்சிகள் சார்பில் மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்லை பந்தயம் நடைபெற்று வரும் நிலையில் இந்தாண்டும் பந்தயம் நடத்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக 24 பேர் கொண்ட விழா குழு அமைக்கப்பட்டுள்ளன.





