குழந்தைகளை விரட்டி விரட்டி கடித்த வெறி நாய்..!
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் வெறிநாய் கடித்ததில் இரு குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். ரகுமானியாபுரம் பகுதியை சேர்ந்த இரண்டு குழந்தைகளை அந்த பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று கடித்து குதறியதில் இரண்டு குழந்தைகளும் காயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் இரண்டு குழந்தைகளையும் மீது கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஒரு குழந்தைக்கு காயம் அதிகமாக இருந்ததால் அந்த குழந்தை தென்காசி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சை அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் குழந்தைகளை கடித்த வெறிநாய்களை உடனடியாக பிடித்து கொண்டு விட நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






