கர்ப்பிணி மனைவியை விட்டுச் சென்ற காதலன்..!
சேலம் மாவட்டமும் ஓமலூர் அருகே கர்ப்பிணி பெண் ஒருவர் காதல் கணவருடன் சேர்த்து வைக்க கூறி கணவர் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஜேசிபி பழுது நீக்கம் கடை உரிமையாளரின் மகன் மோகன் ராஜனும் கூலி தொழிலாளி ஒருவரின் மகள் பவித்ராவும் காதலித்து கோயிலில் திருமணம் செய்து சென்னையில் வீடு எடுத்து வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
அண்மையில் சகோதரிக்கு குழந்தை பெறுவதாக கூறி ஊருக்கு சென்ற மோகன் ராஜ் திரும்பி வரவில்லை எனக் கூறி பவித்ரா கடந்த மாதம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஒரு மாதமாகியும் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. மண்ணென்னெய் கேனுடன் பவித்ரா போராட்டத்தில் ஈடுபட்டார்.






