--- --:--:-- --

நாயை துன்புறுத்தியவருக்கு மாடு கொடுத்த தண்டனை..!

2

நாயை துன்புறுத்திய கொடூர மனம் கொண்ட மனிதனை மாடு ஒன்று முட்டி தூக்கி வீசிய தண்டனை கொடுத்தது. சுஷாந்தா நந்தா என்ற வனத்துறை அதிகாரி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

 

அதில் கொடூர மனம் கொண்ட மனிதன் ஒருவன் நாய் ஒன்றின் காதை பிடித்து திருகி துன்புறுத்துகிறான். நாய் கதறி அழுது கொண்டிருந்தது. ஆனால் அந்த துஷ்ட மனிதன் நாயை துன்புறுத்தும்வரை விடவில்லை. இதை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த பசு ஒன்று கோபமடைந்து அந்த மனிதரை முட்டித் தள்ளி தரையில் விழுக செய்கிறது.

 

பின்னர்தன் கொம்பால் அந்த மனிதனை தாக்கியது.. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சிரித்தனர் கொடூர மனம் கொண்ட மனிதனுக்கு சரியான தண்டனையை மாடு கொடுத்ததாக பாராட்டியுள்ளனர்.

Right Menu Icon